நிலா திருவிழா: வந்தவாசியில் நிலாவை நேரில் கண்டுகளித்த பொதுமக்கள்

தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு, தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை, மத்திய அரசின் விஞ்ஞான் பிரசார், அஸ்ட்ரானமி மற்றும் சயின்ஸ் சொசைட்டி, பெங்களூருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஆஸ்ட்ரோபிசிக்ஸ், அஸ்ட்ரோனாமிக்கல் சொசைட்டி ஆப் இந்தியா, பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கம், அறிவியல் பலகை ஆகியவை இணைந்து தமிழ்நாட்டில் 'நிலாத் திருவிழா 200' என்ற நிகழ்ச்சி கடந்த 25-ந்தேதி முதல் நடத்தப்பட்டு வருகிறது. 

சென்னை, கோவை, திருச்சி உள்பட தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பகுதி பகுதியாக இந்த நிலாத்திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. வானவியலில் ஆர்வமுள்ள தன்னார்வலர்கள் அதிநவீன தொலைநோக்கிகளுடன் பொதுமக்களை சந்தித்து இந்த நிலாத்திருவிழாவை நடத்தி வருகிறார்கள். 

சென்னை மெரினா பாரதியார் சிலை அருகே நேற்று 'நிலாச்சோறு' என்ற தலைப்பில் இந்த நிலாத்திருவிழா நடத்தப்பட்டது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். 

அதேபோல், வந்தவாசி தேரடி பகுதியில், வானவியல் தன்னார்வ குழுவான பிஹைண்ட் எர்த் (Behind Earth) யூடியூப் சேனல் அணியினர், பொதுமக்களுக்கு அதிநவீன தொலைநோக்கி மூலம் காண்பித்தனர். அப்போது,  நிலாவின் முழு உருவத்தை ஏராளமான பொதுமக்கள் வரிசையில் நின்று கண்டு உற்சாகம் அடைந்தனர்.


புதியது பழையவை