முக்கியச் செய்தி: மின் தடை அறிவிப்பு ரத்து

வந்தவாசி பகுதியில் அறிவிக்கப்பட்டிருந்த மின் நிறுத்தம் நாளை (18.06.2022) ரத்து செய்யப்படுவதாக மின்சார துறை தெரிவித்துள்ளது. 
மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை வந்தவாசி பகுதிகளில் மின் சாரம் நிறுத்தப்படு என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதால், தடையின்றி மின்சாரம் வழங்க கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இதை ஏற்று, மின்விநியோகம் வழக்கம்போல் வழங்கப்படும் என்றும், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த மின்சார தடை ரத்து செய்யப்படுவதாகவும் மின்சார துறை தெரிவித்துள்ளது.

Vandavasi Power Cut News 
புதியது பழையவை