வந்தவாசியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் - அபராதம்

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், வந்தவாசி காந்தி சாலையில் ஒரு கடையிலும், பெட்டிநாயுடு தெருவில் ஒருவரின் வீட்டிலும்  விற்பனை செய்து வருவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நகராட்சி ஆணையாளர் முஸ்தபா தலைமையிலான அதிகாரிகள் குழு சென்று சோதனை மேற்கொண்டனர்.அங்கு பிளாஸ்டிக் கவர், கப், உள்ளிட்ட பொருட்கள் மூட்டை மூட்டையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்து, தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் அளவு 4 டன் எடை இருக்கும் என கூறப்படுகிறது. இதன் மதிப்பு ரூ.5 லட்சம் மதிப்பு எனவும் கூறப்படுகிறது.

புதியது பழையவை