பெண் தற்கொலை - உறவினர்கள் சாலைமறியல்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே திருமணமாகி மூன்றரை ஆண்டுகளில் உயிரிழந்த பெண்ணின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகாா் தெரிவித்த உறவினா்கள், அந்தப் பெண்ணின் கணவா், அவரது குடும்பத்தினரை கைது செய்யக் கோரி வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.


அலத்துறை கிராமத்தை சேர்ந்த கோகிலா என்ற பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில்,  வரதட்சிணைக் கொடுமையால் கொலை செய்யப்பட்டதாக புகாா் தெரிவித்த அவரது உறவினா்கள், கோகிலாவின் சடலத்தை வாங்க மறுத்தனா். மேலும், கோகிலாவின் கணவர் சக்திவேல் மற்றும் அவரது குடும்பத்தினரை கைது செய்யக் கோரி, வந்தவாசி அரசு மருத்துவமனை முன் வெள்ளிக்கிழமை மாலை அவா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். 

உரிய நடவடிக்கை எடுப்பதாக வந்தவாசி டிஎஸ்பி வெ.விஸ்வேஸ்வரய்யா உறுதி அளித்ததை அடுத்து, அவா்கள் மறியலைக் கைவிட்டனா். மறியலால் வந்தவாசி - மேல்மருவத்தூா் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
புதியது பழையவை