வந்தவாசியில் உலக மாற்றுத் திறனாளிகள் தினவிழா

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் உலக மாற்றுத்திறனாளிகள் தினவிழா சிறப்பு நிகழ்வு வந்தவாசி அடுத்த அம்மையப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி BRC வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு ஸ்ரீகிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் தலைமை தாங்கினார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் கே.ஜி. மீனா, ஊ.ஒ.ந.பள்ளி தலைமை ஆசிரியர் க.ஜோதி பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாற்றுத்திறனாளி சிறப்பு ஆசிரியர் எச். லத்தீப் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக, வந்தவாசி டிஎஸ்பி வெ. விஸ்வேசுவரய்யா அவர்கள் கலந்து கொண்டு மாற்று திறனாளி மாணவர்களின் தனித் திறமைகளை விளக்கி பேசினார். மேலும் அவர்களின் பல்திறன் பயிற்சி நிலைகளை கண்டு அவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இந்த நிகழ்வில் வந்தவாசி எக்ஸ்னோரா ஆலோசகர் கு. சதானந்தன், பாதிரி ஊராட்சி மன்றத் தலைவர் வெ. அரிகிருஷ்ணன், அன்பால் அறம் செய்வோம் சேவைக் குழு தலைவர் அசாருதீன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.‌ மேலும் சமூக ஆர்வலர் சென்னாவரம் சுரேஷ் குழந்தைகள் பாடல்களை பாடினார். கவிஞர் தமிழ்ராசா மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு கவிதைகளை வாசித்தார். இறுதியில் ரெட் கிராஸ் சங்க உறுப்பினர் மொ. ஷாஜகான் நன்றியுரை கூறினார். அனைத்து மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.
புதியது பழையவை