வந்தவாசி வட்டம், பாதிரி ஊராட்சி மன்ற வளாகத்தில் கால்நடைகளுக்கான இலவச கோமாரி நோய் தடுப்பூசி மற்றும் சிகிச்சை முகாம் இன்று நடைபெற்றது.
முகாமை ஊராட்சி தலைவர் வெ.அரிகிருஷ்ணன் தலைமை வகித்து தொடக்கி வைத்தார். துணைத்தலைவர் சாந்திமுருகன் முன்னிலை வகித்தார். முகாமில், சலுக்கை அரசு கால்நடை மருத்துவமனை மருத்துவர் கார்த்திக் உள்ளிட்ட மருத்துவக்குழுவினர் கலந்துகொண்டு 150 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தினர்.
மேலும், கால்நடை வளர்ப்பாளர்களிடம் கால்நடைகளுக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர்.
நிகழ்ச்சியில், ஊராட்சி உறுப்பினர்கள், கால்நடை வளர்ப்பாளர்கள் உள்ளிட்ட திரளானோர் கலந்துகொண்டனர்.