கோயில் குப்பம் சாத்தனூர் கிராமத்தில் உலக மண்வள நாள் விழிப்புணர்வு நிகழ்வு

வந்தவாசி அடுத்த கோயில் குப்பம் சாத்தனூர் ஊராட்சியில் உலக மண்வள நாள் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் வேளாண்மை துறை அதிகாரி சிவரஞ்சனி அவர்கள் பேசுகையில் “மண்ணில் உள்ள பல்லுயிரிகளைப் பாதுகாப்பதன் மூலம் மண்ணை உயிர்த்தன்மையுடன் இருக்கச் செய்வோம். அதற்கு, ஒவ்வொரு சாகுபடியிலும் அங்கக எருக்கள் மற்றும் உயிர் உரங்களை பயன்படுத்த வேண்டும்” என்றார். மேலும் மண்வள அட்டையின் முக்கியத்துவம், மண் மாதிரியின் அவசியம் குறித்தும் விளக்கினார். இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர்,துணைத்தலைவர் விவசாயிகள் மற்றும் கிராம பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு தங்களின் சந்தேகங்களை கேட்டும் பயன்பெற்றனர்.
புதியது பழையவை