வந்தவாசி காட்டுநாயக்கன் பகுதிவாழ் மக்கள் சாதிச்சான்றிதழ் வழங்க கோரி சட்டமன்ற உறுப்பினரிடம் மனு

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் காட்டுநாயக்கன் பகுதிவாழ் மக்களின் நீண்டநாள் கோரிக்கையான சாதிச்சான்றிதழ் வேண்டி இன்று சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார் அவர்களிடம் கோரிக்கை விடுத்தனர். இதுசம்பந்தமாக உடனடியாக மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடனடியாக சாதிச்சான்றிதழ் வழங்க ஆவணம் செய்யுமாறு கேட்டுக்கொண்டு இரண்டு மாதங்களில் பெற்று தருவதாக கூறியுள்ளார். இந்நிகழ்வில் அன்பால் அறம் செய்வோம் பொது சேவை குழுவின் நிறுவனர் அசாருதீன் மற்றும் காட்டு நாயக்கர் பகுதியை சேர்ந்த பச்சையப்பன், முருகன் மற்றும் பலர் இருந்தனர்.
புதியது பழையவை